வார இறுதி நாட்களில் பயணிகள் ரயில் சேவைகள் இடம்பெறமாட்டாது என்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் M.J.D. பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
வார இறுதியில் அதாவது 2020.11.21 மற்றும் 2020.11.22 ஆகிய இரு தினங்களிலும் எந்தவொரு பயணிகள் ரயிலும் சேவையில் ஈடுப்படமாட்டது என்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.