மேற்கிந்திய தீவுகள் – நியூசிலாந்து ஏ அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டம் ஆரம்பம்..
Related Articles
மேற்கிந்தி தீவுகள் நியூசிலாந்து ஏ அணிகளுக்கிடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம் இன்று குய்ன்ஸ்டனில் ஆரம்பமானது. நாணய சுலற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து ஏ அணி 79 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களைபெற்ற வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. அணிசார்பாக ரச்சின் ரவீந்திர 112 ஓட்டங்களையும். ஹென்ரி நிகல்ஸ் 76 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சில் ச்செமர் ஹோல்டர், ஹல்சாரி ஜோசப், ரெய்மன் ரைபர் தலா ஒவ்வொரு விக்கட்டுக்களை கைப்பற்றினர். இந்நிலையில் தனது முதல் இனிங்சை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி, இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவின் போது 8 ஓவர்களில் ஒரு விக்கட்டை இழந்து 17 ஓட்டங்களை பெற்றுள்ளது.