fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பேலியாகொடை மெனிங் சந்தை மக்களின் உரிமைக்கு கையளிக்கும் நடவடிக்கை பிரதர் தலைமையில்..

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 20, 2020 10:47

பேலியகொடை மெனிங் சந்தை இன்று மக்களின் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறும். சந்தைத்தொகுதியில் ஆயிரத்து 192 வர்த்தக நிலையங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. வாகன தரிப்பிடம், ஓய்வறை, குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலை உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டதாக கட்டிடத்தொகுதி அமைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர், கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார். நான்கு மாடிகளை கொண்ட புதிய வர்த்தக சந்தைத்தொகுதி, மூன்றாம் மாடி வரை மரக்கறி லொறிகள் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சந்தைத்தொகுதிக்கென 690 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 20, 2020 10:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க