இன்றைய தினம் முதல் 200 ரூபாவிற்கு டின்மீன்களை விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. டின்மீன் உற்பத்தியை மொத்தமாக சதோச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையம் ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கலாநிதி பந்துள குணவர்தன, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தேசிய டின்மீன் உற்பத்தியாளர்ள் சங்களம் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக மீன்பிடி அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய உற்பத்தியாளர்களிடம் இருந்து 198 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படும் டின்மீன் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. வெளிநாடுளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டின்மீன்களை 200 ரூபாவுக்கும் கூடுதல் விலையில் விற்பனை செய்யவேண்டடாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.