அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்ட 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்று காலை 9.30 ஆரம்பமானது. இன்று தொடக்கம் 21 ஆம் திகதி வரையில் வரவு செலவு திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. இதுதொடர்பில் வாக்கெடுப்பு 21 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
23 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 10 திகதி வரையில் குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது. டிசம்பர் மாதம் 10 திகதி மாலை 5.00 மணிக்கு வரவுசெலவு திட்டத்தின் 3 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும். மேலும் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தை பிரதமரும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் சமர்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.