fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தொற்று நிலைக்கு மத்தியிலும் அரசாங்கம் தனது பொறுப்பை மக்களுக்காக ஆற்றிவருகின்றது..

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 17, 2020 13:24

கொரோனா தொற்றுக்கு மத்தியில் சிரமங்களை முகம்கொடுத்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் சுமார் 70 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் கலாநிதி கொடஹேவா தெரிவித்துள்ளார். தொற்று நிலைக்கு மத்தியிலும் அரசாங்கம் தனது பொறுப்பை மக்களுக்காக ஆற்றிவருவதாக சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஹத்வெனிபய நேரடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மீதொட்டமுல்ல குப்பைமேடு இடிந்து வீழ்ந்த போது நிவாரணம் வழங்க பல ஆண்டுகாலம் எடுத்தவர்களே இப்போது நிவாரணங்கள் குறித்து கதைக்கின்றனர். சாலாவ ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட விபத்தின் போது நிவாரணம் வழங்கவும் பல வருடங்கள் சென்றன. சிறியதொரு விடயத்தைக்கூட முகாமைத்துவம் செய்யமுடியாத தோல்வியடைந்தவர்களுக்கு ஜனாதிபதி குறித்து கதைக்க தகுதியில்லை. பொருளாதார நடவடிக்கைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டை முற்றுமுழுதாக முடக்கி மக்களுக்கு உணவளிக்க கூடிய பொருளாதாரமொன்றையா கடந்த அரசாங்கம் எமக்கு மீதப்படுத்தியது. மிகவும் சிரமத்துடனேயே முகாமைத்துவப்படுத்தப்பட்டு மக்களுக்கான விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. கொரோனாவுக்கு முகம்கொடுத்துள்ள மக்களுக்கு நிவாரணம் அழிப்பதற்காக மாத்திரம், சுமார் 70 பில்லிய்ன ரூபாவை அரசாங்கம் செலவிட்டுள்ளது. நாட்டில் எவ்வாறான பிரச்சினைகள் காணப்பட்டபோதிலும் நாட்டு மக்களை அரசாங்கம் ஒருபோதும் கைவிடமாட்டாது. மக்களுக்காக சேவையை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புச் செய்துள்ளது. பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்திருந்த நாடு தற்போது கிரமமாக முகாமைத்துவ படுத்தப்படுகிறது. தற்போதய அரசாங்கத்தின் வெற்றிகரமான செயற்பாடுகளுடன் இந்நிலைக்கு அரசாங்கம் முகம்கொடுத்துவருகின்றது. அழிவில் இட்டுச்சென்ற நாட்டை துரிதகதியில் சீரமைக்க முடியாது. அதற்குரிய நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்படுகின்றன.”

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 17, 2020 13:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க