ஈராக்கில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 21 பேருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக்கில் ISIS அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிகள் பலர் அரச படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, வாழ்நாள் சிறைத்தண்டனை மற்றும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்குதல் மற்றும் கொலை வழக்குகளுடன் தொடர்புடைய 21 பேருக்கு நேற்றைய தினம் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.