ஜனாதிபதி நாளைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்..
Related Articles
ஜனாதிபதி; கோட்டாப்ய ராஜபக்ஷ பதவியேற்று நாளையுடன் ஓராண்டு பூர்த்தியாகிறது. இந்நிலையில் தமக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புவோர் எந்தவொரு விழாக்களையும் நிகழ்வுகளையும் ஒழுங்கு செய்ய வேண்டாமென ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றியீட்டினார். அதனையடுத்து நவம்பர் மாதம் 18ம் திகதி அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற, கோட்டாப்ய ராஜபக்ஷ மக்களின் மனதை வென்ற தலைவராக தொடர்ந்தும் செயற்ப்பட்டு வருகிறார். இந்நிலையில் நாளைய தினம் பதவியேற்பின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு எந்தவொரு வீண் செலவுகளையும் செய்ய வேண்டாமென அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ நாளைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். இரவு 8.30 மணிக்கு ஜனாதிபதியின் உரை இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.