இலங்கை இராணுவத்தில் தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளை இணைக்கும் வகையில் வடகிழக்கு மாகாணங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இலங்கை இராணுவத்தில் தமிழ் மொழி பேசுபவர்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் இவ் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளை இராணுவத்தில் இணைக்கும் வகையிலான நேர்முக தேர்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இராணுவ உயர் அதிகாரிகளால் நேர்முக தேர்வுகள் நடாத்தப்பட்டன.