அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் 19 நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான செயற்குழு தீர்மானித்துள்ளது.
நாளை மறுநாள் முதல் 21 ம் திகதி வரை வரவுசெலவுத்திட்டத்தின் 2 ம் வாசிப்பிற்கான விவாதம்; இடம்பெறும். 2 ம் வாசிப்பு தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறுமென பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 23 ம் திகதி முதல் செயற்குழு தொடர்பான விவாதம்
இடம்பெறும். அது அடுத்தமாதம் 10 ம் திகதி வரை இடம்பெறும். அதன் அடிப்படையில் பாராளுமன்ற செயற்குழு தொடர்பான விவாதத்தின் பின்னர் இடம்பெறும் வாக்கெடுப்பு அடுத்தமாதம் 10 ம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறும். வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதம் இடம்பெறும் காலப்பகுதியில் பாராளுமன்றம் நாளாந்தம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடம்பெறும். நாளை மறுதினம் முதல் 20 ம் திகதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 10.30 வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகள் இடம்பெறும். இம்மாதம் 25 ம் திகதி முதல் அடுத்த மாதம் 10 ம் திகதி வரையும் காலை 9.30 மணி முதல் 10 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகள் தொடுப்பதற்கான காலம் ஒதுக்கப்பட்டுள்ளது.