fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சூடானில் அமைதிகாக்கும் பணிக்காக செல்லவுள்ள இராணுவ துருப்பினர்கள் இராணுவ தளபதிக்கு மரியாதை செலுத்தினர்..

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 13, 2020 18:46

சூடானில் அமைதிகாக்கும் பணிக்காக செல்லவுள்ள இராணுவ துருப்பினர்கள் இராணுவ தளபதிக்கு மரியாதை செலுத்தினர்.

தென் சூடானில் அமைதி காக்கும் பணிக்காக வெளியேறவுள்ள 66 இராணுவ துருப்பினர்கள் அடங்கிய குழுவில் வைத்திய ஊழியர் படையும் அடங்குகின்றது. இரு வைத்திய நிபுணர்கள் வைத்திய குழு மற்றும் இலங்கை சமிக்ஞை படையணி, பொறியியல் சேவை, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர்கள் ஆகிய ரெஜிமென்டுகளை சேர்ந்தவர்கள் இதில் அடங்குகின்றனர். இவர்கள் நாட்டில் இருந்து செல்ல முன்னர் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் அணி வகுப்பு மரியாதையொன்றில் ஈடுபட்டனர். வேரஹெரவில் அமைந்துள்ள இராணுவ வைத்திய படையணி மத்திய நிலையத்தில் இது இடம்பெற்றதுடன், இராணுவத்தினர் சிரேஸ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதில் இணைந்திருந்தனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 13, 2020 18:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க