fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமில்லையென அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 13, 2020 15:42

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமில்லையென அறிவிப்பு

அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ஈடுபடும் வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை கடைப்பிடிப்பதற்கான அவசியம் இல்லையென போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இவ்வருடம் இடம்பெறவிருந்த போட்டித்தொடர் கொவிட் 19 தொற்று காரமக அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் போட்டிகளில் பங்கேற்றும் வீர வீரராங்கணைகள் அடுத்த வருடம் டோக்கியோ நகருக்கு பயணிக்கவுள்ளனர். இந்நிலையில் ஜப்பானுக்கு வருகை தருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் வீரர்கள் தமது நாடுகளில் கொவிட் பரிசோதனையை மேற்கொண்டிருப்பது கட்டாயமென அறிவிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலை கடைப்பிடிப்பது என்பது சாத்தியமற்றதென ஒலிம்பிக் போட்டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஜப்பானுக்கு வருகை தரவுள்ள போட்டியாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் போட்டிகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் உள்ளிட்டோர் குறித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இதேவேளை ஒலிம்பிக்போட்டிகளை பார்வையிடுவதற்கு வருகை தரும் ரசிகர்களை டோக்கியோவுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 13, 2020 15:42

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க