fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சியம்பலாண்டுவ பகுதியில் சூரியசக்தி பூங்கா..

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 12, 2020 13:05

சியம்பலாண்டுவ பகுதியில் சூரியசக்தி பூங்கா..

சியம்பலாண்டுவ சூரிய சக்தி பூங்காவின் நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்படுமென ராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சியம்பலாண்டுவ சூரிய சக்தி பூங்காவின் நிர்மாணப் பணிகள் குறித்து அதிகாரிகளை அறிவுறுத்தும் கலந்துரையாடல் சூரிய சக்தி , காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி திட்ட அபிவிருத்தி ராஜாங்க அமைச்சில் இடம்பெற்றது. ராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, சஷேந்திர ராஜபக்ஷ ஆகியோரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

நாம் முன்னெடுக்கின்ற சூரிய சக்தியிலான பூங்காக்களில் பயன்படுத்தப்படுகின்ற் காணிகளின் அளவீடுகளைப் பொறுத்து பயிர்ச்செய்கைகளை முன்னெடுக்கும் வேலைத்திட்டமும் அமுல்படுத்த்ப்படும். முதலீட்டாளர் ஒருவர் 50 ஏக்கர் நிலத்தை பயன்படுத்துவதாயின் பயிர்களை நடுவதற்கும் சந்தர்ப்பம் வழங்குவோம். சுற்றாடல் திட்டங்களும் இதன் மூலம் அமுல்படுத்தப்படும். தனியார் முதலீட்டாளர்களுக்கு அரச காணிகளை ஒதுக்குவதற்கான சட்டரீதியிலான திட்டமொன்றும் வகுக்கப்படும். இதற்கு தேவையான பரிந்துரைகளை துரிதமாக பெற்றுக்கொள்;வதே இப்பேச்சுவார்த்த்யின் நோக்கமாகும்.)”

இங்கு கருத்து தெரிவித்த ராஜாங்க அமைச்சர் சஷேந்திர ராஜபக்ஷ அவ்வளாகத்தில் பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டுள்ள அனுமதியற்ற விவசாயிகளுக்காக சட்டரீதியிலான காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 12, 2020 13:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க