தியவண்ணா ஓயாவில் வள்ளமொன்றும் தோணியொன்றும் நேற்று விபத்தக்குள்ளாகியதில் நீரில் மூழ்கி காணமல்போன நபரின் சடலம் இன்று காலை பாதுகாப்பு தரப்பினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
தியவண்ணா ஓயாவின் பொல்துவ பாலத்திற்கு அருகாமையில் பாதுகாப்பு வலையை நீக்கி பாராளுமன்ற வலயத்திற்குள் பிரவேசிப்பதற்கு முயற்சித்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் வள்ளத்தில் இருந்த இருவரில் ஒருவர் காணமல் போயிலிருந்தார். இவரை தேடும் பணியில் வெலிக்கடை பொலிசாரும் சுளியோடிகளும் நடவடிக்கைகளை எடுத்ததுடன் அவரது சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. சம்பவத்தில் 26 வயதுடைய புத்கமுவ பகுதியை வசிப்பிடமாக கொண்டவரே உயிரிழந்துள்ளார். அவரும் மற்றையவரும் மீன்பிடிப்பதற்காக தியவண்ண ஓயாவுக்கு பிரவேசித்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். மற்றைய நபர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டதுடன் வெலிக்கடை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.