இந்திய – அவுஸ்திரேலிய கிரிக்கட் போட்டிகளை நேரில் பாரவையிட ரசிகர்களுக்கு அனுமதி..
Related Articles
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான கிரக்கெட் போட்டிகளை நேரில் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 27ம் திகதி முதல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 19ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இரு அணிகளும் மூன்று ஒருநாள், மூன்று டுவண்டி – 20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர்களில் பங்கேற்கவுள்ளன.
இதற்கென இந்திய அணி ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்திலிருந்து, அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கிரிக்கெட் போட்டிகளை நேரில் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் டுவண்டி – 20 தொடரை மைதானத்தின் மொத்த இருக்கை வசதியில் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. டெஸ்ட் போட்டியை பார்வையிட நாளாந்தம் 25 ஆயிரம் பேரை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. போட்டி இடம்பெறும் சந்தர்ப்பத்தில் காணப்படும் சூழ்நிலைக்கேற்ப ரசிகர்களின் அனுமதிக்கான எண்ணிக்கை அதிரிக்கப்படுமென அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.