மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிலியந்தலை வேரஹெர அலுவலக செயற்பாடுகள் இன்று மீள ஆரம்பமாகின்றன. மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களின் பங்களிப்புடன் அலுவலகங்களை மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் கொரோனா பரவல் நிலையால் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட அலுவலகம் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும். பிரதான அலுவலகத்தினூடாக வழங்கப்படும் சேவைகளை யாழ்பாணம், அநுராதபுரம், குருநாகல், கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை அலுவலகங்களினூடாக பெற்றுக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று முதல் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் பொது மக்களுக்கு கிடைக்கப்பெறுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள வேரஹெர அலுவலக செயற்பாடுகள் இன்று மீள ஆரம்பம்
படிக்க 0 நிமிடங்கள்