பிரித்தானியாவில் வேலையில்லதோரின் எண்ணிக்கை 4.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் முதல் மூன்று மாதங்களிலேயே குறித்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 3 இலட்சத்து 14 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது. வேலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 47 ஆயிரமாக குறைவடைந்துள்ளது. கொவிட் – 19 தொற்று பரவலை அடுத்து வேலையில்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன.