Country | Buying | Selling | |
![]() | Dollar | 179.39 | 183.06 |
USA | |||
![]() | Pound | 232.18 | 239.41 |
UK | |||
![]() | Euro | 197.73 | 204.49 |
EU | |||
![]() | Yen | 1.62 | 1.67 |
Japan | |||
![]() | Yuan | 25.72 | 6.91 |
China | |||
![]() | Dollar | 121.84 | 126.92 |
Australia |
அடுத்த வாரமளவில் மெனிங் சந்தையின் செயற்பாடுகள் பேலியகொடையில்…
Related Articles
கொழும்பு மெனிங் வர்த்தக சந்தையின் செயற்பாடுகளை கொழுபுக்கு வெளியில் தற்காலிகமாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பேலியகொடை பகுதியில் புதிய இடமொன்றை ஒதுக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படை வசதிகள் தற்போது அபிவிருத்திக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவ்வார இறுதியில் அல்லது எதிர்வரும் திங்கட்கிழமையளவில் மெனிங் வர்த்தக சந்தையின் வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. குறித்த செயற்பாடுகளில் கொழும்பு மெனிங் சந்தையில் பணி புரிந்த சகல ஊழியர்கள், நாட்டாமைமார் ஆகியோர் ஈடுபட முடியும். எனினும் அவர்களுக்கு பீசீஆர் பரிசோதனையின் முடிவுகளுக்கமைய, கொவிட் – 19 தொற்று ஏற்படவில்லையென உறுதிசெய்யப்பட்டிருக்கவேண்டியது கட்டாயமாகும்.
இதுவரை பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளாதவர்கள் இருந்தால், பரிசோதனைகளை நடத்துவதற்கான பட்டியலை மத்திய கொழும்புக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் நிஷால் த ச்சந்திரசேகரவுக்கு வழங்க வேண்டும். அவரது தொலைபேசி இலக்கமான 071 859 1551 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி பட்டியலை வழங்குமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.