எதிர்வரும் தீபாவளி பண்டிகையின் போது தோட்ட மக்கள் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட வேண்டுமென மத்திய மாகாண ஆளுநர் சட்டதரணி லலித் யு. கமகே தெரிவித்துள்ளார்.
“நுவரெலியா போன்ற மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாடவுள்ள இத்தருணத்தில் வரையறைகளுக்குட்பட்ட வகையில் அப்பண்டிகையை கொண்டாடுமாறு சமய தலைவர்களிடமும் இந்து பக்தர்களிடமும் கேட்டுக் கொள்கின்றோம். அவ்வாறு இல்லாவிடில் நாட்டில் பாரியதொரு பிரச்சினை உருவெடுக்கலாம். தீபாவளி பண்டிகையை கொண்டாடவுள்ள இக்காலக்கட்டத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி தமது மத அனுஷ்டானங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.”