Country | Buying | Selling | |
![]() | Dollar | 179.39 | 183.06 |
USA | |||
![]() | Pound | 232.18 | 239.41 |
UK | |||
![]() | Euro | 197.73 | 204.49 |
EU | |||
![]() | Yen | 1.62 | 1.67 |
Japan | |||
![]() | Yuan | 25.72 | 6.91 |
China | |||
![]() | Dollar | 121.84 | 126.92 |
Australia |
சுகாதார பரிந்துரைகள் கிடைக்கும் வரை மெனிங் சந்தைக்கு பூட்டு
Related Articles
சுகாதார பரிந்துரைகள் கிடைக்கும் வரை புறக்கோட்டை மெனிங் சந்தையை திறக்க முடியாதுள்ளது. இதேநேரம் மரக்கறிகளை மொத்தமாக இன்று காலை எடுத்துவந்த வர்த்தகர்கள் சிரமங்களுக்கு உட்பட்டதை தொடர்ந்து அங்கு முறுகல் நிலை ஏற்பட்டது.
மெனிங் சந்தைக்கு சமீபமாக பல கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து சந்தை மூடப்பட்டது. தூர இடங்களிலிருந்து எடுத்துவரப்படும் மரக்கறியை நடமாடும் வண்டிகள் ஊடாக விநியோகிப்பதற்கு மெனிங் சந்தை பொது ஊழியர் சங்கம் நடவடிக்கை எடுத்தது.
மேல் மாகாணத்திற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மெனிங் சந்தையை திறப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் மரக்கறி மொத்தமாக இன்று காலை சந்தைக்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சில வர்த்தகர்கள் எடுத்துவந்த மரக்கறியை மீண்டும் திருப்பி எடுத்துச்சென்றுள்ளனர். எனினும் சிலர் வீதியின் இருமருங்கிலும் மரக்கறியை விற்பனை செய்வதை அவதானிக்க முடிந்தது. இதனால் தாம் பெரும் சிரமங்களுக்கு உட்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வர்த்தகர்களுடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.