fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பு மத்திய தபால் பரிமாற்று நிலையத்தின் சேவைகள் மீள ஆரம்பம்..

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 9, 2020 12:42

கொழும்பு மத்திய தபால் பரிமாற்று நிலையத்தின் சேவைகள் மீள ஆரம்பம்..

கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தின் சேவைகள் மீள ஆரம்பமாகியுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய சர்வதேச விரைதூதர் தபால் சேவை, வர்ததக தபால் மற்றும் உள்ளுர் விரைதூதர் தபால் சேவைகள் என்பவற்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதிவு தபால் பிரிவை தெரிவு நடவடிக்கைகளுக்கென நாளை முதல் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தபால் மா அதிபர் ரன்ஜித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தபால்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரசாங்கத்தின் அல்லது தனியார் நிறுவனங்களுக்கான முத்திரை இடல் இயந்திரம் தொடர்பான அலுவல்களும் இன்றைய தினம் முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 0112 320 700 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இதற்கான நேரத்தை தெரிவுசெய்துக் கொள்ளுவதற்கான முன்னேற்பாட்டை மேற்கொள்ளுமாறு தபால் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களைக் கொண்டு பணிகள் முன்னெடுக்கப்படவிருப்பதால், தபால் சேவை பரிமாற்றத்தில் தாமதம் ஏற்படலாமென தபால் மா அதிபர் ரன்ஜித் ஆரியரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 9, 2020 12:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க