நெதர்லாந்தில் மிங்க் எனப்படும் சிறிய வகை விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் சில பகுதிகளை முழுமையாக முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் முடக்கநிலை அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிங்க் எனும் விலங்கினூடாக மனிதர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நெதர்லாந்தில் சுமார் 17 மில்லியன் மிங்க் இன விலங்குகள் வாழ்கின்றன. அவை தொடர்பான ஆய்வொன்றை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.