புத்தளம் உடப்பு பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். தமது சகோதரர் மீது இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்துவதாக கிடைத்த தகவலையடுத்து குறித்த இளைஞர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். மோதலை சமாதானப்படுத்த முயற்சித்த போது சிலர் குறித்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் படுகாயமடைந்த அவர் உடப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
டுபாயில் தொழில்புரிந்த அவர் இலங்கை திரும்பியதுடன் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வீட்டிலிருநதவர் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.