தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலமான நிலையில்.
Related Articles
நாட்டின் பல பொலிஸ் அதிகார பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ளது. மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மேல் மாகாணத்தில் 112 பொலிஸ் அதிகார பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குளியாப்பிட்டிய மற்றும் எஹலியகெர்டபொலிஸ் பிரிவுகளை போன்று குருநாகல் பொலிஸ் பிரிவில் குருநாகல் நகர சபை எல்லை பிரிவிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ளது. கிரிவுல்ல, மாவனெல்லை, ஹெம்மாத்தகம, புலத்கொஹூ|பிட்டிய ஆகிய 4 பொலிஸ் பிரிவுகளுடன் கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ பிரதேச செயலக பிரிவு தனிமைப்படுத்தல் பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணியுடன்;நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 180 பேர் கைது செய்யப்பட்டதுடன் 25 வாகனங்களும் கைப்பற்றப்பட்டன. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகிப்பதற்காக மொத்த வர்த்தக நடவடிக்கைகளுக்காக பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படுமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும் வெலிசர பொருளாதார மத்திய நிலையத்தை எதிர்வரும் 9 ஆம் திகதி திறப்பதற்குத’Pர்மானிக்கப்பட்டது. அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, இராஜாங்க அமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ ஆகியோர் இம்மத்திய நிலையத்திற்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள போதிலும் அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகிக்க தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதே போன்று விநியோக சேவையில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றிற்காக 15 வாகனங்களை பயன்படுத்து:வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை பல்பொருள்அங்காடிகளை திறந்து அதன் ஊடாக பொருட்களை விநியோகிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. மருந்தகங்களை ஒன்லைன் முறையில் நடாத்திச் செல்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அனுமதி பத்திரமாக தமது நிறுவன அடையாள அட்டையை பயன்படுத்துவதற்கு 103 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று சட்டத்தரணிகள் தமது உத்தியோகபூர்வ ஆடைகளை அணிந்து கொண்டு பயணம் செய்வது அல்லது உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை பயன்படுத்துவதன் ஊடாக போக்குவரத்திற்கான அனுமதியை பெற முடியும். தொழிற்சாலைகளை நடத்திச் செல்வதற்கான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான தொலைபேசி இலக்கம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
(கொழும்பு நகரில் தொழிற்சாலைகளை நடத்திச் செல்வதற்கான தகவல்களை 0115978742 அல்லது 745 அல்லது 748 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும். கம்பஹா மாவட்டத்தில் தகவல்களை 0115978711 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்வதுடன் களுத்துறை மாவட்டத்தில் தொழிpற்சாலைகளை நடாத்திச் செல்ல எண்ணியுள்ளவர்கள் 0115811356 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். உற்பத்தி துறைக்கு, கடற்றொழில் துறைக்கு, விவசாயத்திற்கு, பெருந்தோட்ட துறைக்கு நிர்மாண துறையுடன் தொடர்புபடும் நிறுவனங்களாக இருப்பின் இத் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ளமுடியும்.)
ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கைகள் தபால் அலுவலகங்கள் ஊடாக முன்னரை போன்று முன்னெடுக்கப்படுகின்றது.