தற்போது நாட்டில் நிலவும் கொவிட் நிலமை காரணமாக ஒன்லைன் முறையில் வழக்குகளை விசாரிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தொற்று நீக்கல் செயற்பாடுகள் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டன. இதில் இணைந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்;ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னகோனும் இதில் இணைந்திருந்தார்.