fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒரு கோடி கொரோளா தொற்றாளர்களை கொண்ட நாடாக அமெரிக்கா பதிவாகும் அபாயம்….

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 31, 2020 13:39

கொரோனா வைரஸினால் ஒரு கோடி தொற்றாளர்களை கொண்ட நாடாக அமெரிக்கா பதிவாகவுள்ளது. அந்நாட்டில் இதுவரை 93 இலட்சத்து 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டள்ளனர். நேற்றைய தினத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளனர். அத்துடன் 9 ஆயிரத்து 88 பேர் உயிரழந்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் சில நாட்களுக்குள் அமெரிக்காவிற்குள் கொரோளா தொற்றாளர்களின் எண்ணி;க்கை ஒரு கோடியை எட்டுமென ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஐரோப்பிய வலயத்திற்குட்பட்ட நாடுகளிலும் கொரோனாவின் 2ம் அலை தாக்கம் அதிரித்துள்ளது. பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், பிரித்தானியா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் தொற்றாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 31, 2020 13:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க