அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை விஜயம் தொடர்பில் சீன தூதரகம் டுவிட்டர் ஊடாக தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளது. இலங்கையுடன் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தி செயற்பட்டு வருவதால் சீனா வேலைப்பழுவுக்கு மத்தியில் உள்ளது. இதனால் அமெரிக்காவுடன் விளையாடிக் கொண்டிருக்க நேரமில்லையென குறித்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவுக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரே இடத்தில் ஒரே தளத்தில் இரு நாடகங்களை அரங்கேற்றும் திறமையுள்ளதாகவும் சீனா தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.