வெளிநாட்டில் நிர்க்கதியாகியிருந்த மேலும் சில இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்..
Related Articles
கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாட்டில் நிர்க்கதியாகியிருந்த இலங்கையர்கள் 17 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். அவர்களில் 6 பேர் அபுதாபியிலிருந்தும், 11 பேர் டோஹா கட்டாரிலிருந்தும் வருகைத்தந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீசீஆர் பரிசோதனைகளையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.