fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஸ்பெய்னில் அவசர கால நிலமை பிரகடனம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 26, 2020 12:34

ஸ்பெய்னில் அவசர கால நிலமை பிரகடனம்

ஸ்பெய்னில் அவசரநிலமையை பிரகடனப்படுத்துவதற்கு அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்சஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். அதேபோன்று இத்தாலி மற்றும் பிரான்சிலும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய சட்டங்களை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவசர நிலைமைக்கு மேலதிகமாக இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார பரிவினர் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கென மாநிலங்களுக்கு இடையில் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய சட்டங்களை 15 நாட்கள் முதல் 6 மாதம் வரை நீடிப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்கு வதற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதேநேரம் பிரான்சில் வைரஸ் தொற்று தீவிரமாக பரவிவருவதுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 52 ஆயிரம்; தொற்றாளர்கள் அங்கு இனங்காணப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 26, 2020 12:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க