ஸ்ரீ ஜயவர்த்தனபுர பாராளுமன்ற கட்டிட தொகுதி ஊழியர்களுக்காக இன்றும் நாளையும் மூடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற வளாகத்தில் தொற்று நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே இவ்வாறு நடவக்கை மேற்கொள்ளப்படுவதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார். ஊழியர்களுக்காக எதிர்வரும் புதன் கிழமை முதல் பாராளுமன்றம் மீண்டும் திறக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.