மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களில் 219 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுற்றிவளைப்புக்களிலேயே அவர்கள் கைதாகியுள்ளனர்.
போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருத்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த 98 பேரும், அயிஸ் ரக போதைப்பொருளை விற்பனை செய்த 19 பேர் மற்றும் கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்த 44 பேர் இதில் உள்ளடங்குவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.