போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த துறுப்பினரும் பெண் ஒருவரும் களுத்துறையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.
பாணந்துரை அருக்கொட மற்றும் மாலமுல்ல பகுதிகளில் சிறுகாலமாக சிவில் பாதுகாப்பு படை துறுப்பினரும் இப்பெண்ணும் ஹெரோயினை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இவ்விருவரும் களுத்துறை சிறைச்சாலையில் இருந்து போதைப் பொருள் வர்த்தகத்தை வழிநடத்திய நபரின் வழிக்காட்டலின் கீழ் போதைப் பொருளை விநியோகித்து வந்துள்ளனர். இவ்விருவரும் மண்டாவல பகுதியில் வைத்து ஆறு கிராமும் 250 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.