முல்லைத்தீவு பகுதியில் கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போன இருவரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருகோணமலை பகுதியை சேர்ந்த குறித்த இருவரும் கடந்த 19ம் திகதி கடற்றொழிலுக்காக சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லையென முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அது குறித்தான விhசரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போன இருவரை தேடும் பணிகள் ஆரம்பம்
படிக்க 0 நிமிடங்கள்