மீன் சாப்பிடுவதை தவிர்க்க தேவையில்லையென வைத்தியர்கள் தெரிவிப்பு
Related Articles
பேலியகொடை மீன் சந்தை தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டள்ளது. இந்நிலையில் பேலியகொடை மீன் சந்தைக்கருகில் பீ.சீ.ஆர் பரிசோதனைகளை அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
இதேவேளை மீன்கள் ஊடாக கொரோனா வைரஸ் பரவுமா என்பது தொடர்பில் இதுவரை எவ்வித ஆய்வுப்பூர்வமான தகவல்களும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதனால் மீன் உட்கொள்வதைக தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லையென அவர் தெரிவித்தார்.
நாம் தொடர்ச்சியாக கூறும் வித்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றினால் எவ்வித பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பில்லை. மீன்களை பிடித்ததன் பின்னர் கைகளை சரியாக கழுவினால் அந்த சந்தர்ப்பங்களில் முகத்தை தொடுவதை தவிர்த்துக்கொண்டால் நோய் பரவுவதை தவிர்க்க முடியுமென சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.