ஐபிஎல் இருந்து விலகினார் ப்ராவோ…
Related Articles
ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சென்னை அணியின் சகலதுறை வீரர் டுவையன் ப்ராவோ அறிவித்துள்ளார். உபாதைன காரணமாக அவர் இம்முறை ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். டெல்லி அணிக்கெதிரான போட்டியின் போது அவர் காயமடைந்தார். சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி இதனை உறுதிப்படுத்தியுள்ளர்.
இதேவேளை ஐபிஎல் தொடரின் 40வது போட்டி இன்று டுபாயில் நடைப்பெறவுள்ளது. ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் போட்டியில் மோதவுள்ளன. இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் 4 இல் வெற்றி பெற்று 8 புள்ளிகளோடு 6ம் இடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி 9 போட்டிகளில் 3இல் வெற்றி பெற்று 6 புள்ளிகளோடு 7ம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.