fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 22, 2020 12:52

ஒக்டோபர் 21 ம் திகதி தொடக்கம் 27 ம் திகதி வரை அமுல்படுத்த்ப்படுகின்ற, தேசிய வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

தேசிய வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு சுபீட்சத்திற்கான நாற்று மேடை பயிர்கன்றுகளும்; 6 வகையான விதைப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன. சமுர்த்தி தலைமை முகாமையாளர் எம்.பி.ஹுசைன் தலைமையில் பிரதேச செயலாளர் எஸ்.எம்.ரசான் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பயிர்க்கன்றுகளையும் விதைகளையும் வழங்கி வைத்தனர்.

வவுனியா மாவட்டத்திலும் சௌபாக்கிய மர நடுகை தேசிய வேலைத்திட்டத்திற்கு இணைவாக 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம், கண்டி வீதி உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களை மையப்படுத்தி இம் மரநடுகைத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக வவுனியா மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சமன்பந்து சேன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் பனை உற்பத்திகளை ஊக்குவிக்கும் விசேட திட்டத்தின் கீழ்பனை விதைகளை நடும் சம்பிரதாய நிகழ்வு ஐயங்கேணி பகுதியில் நடைபெற்றது. பிரதேச செயலாளர், நிஹாரா மௌஜுட் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். பனை உற்பத்திகள் மூலம் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டதாக பிரதேச விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். முபாரிஸ் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 22, 2020 12:52

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33