fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சஹ்ரான்கள் வெடிக்கச் செய்வார்கள் என்பதை ஏற்கனவே அறிந்திருந்தோம் : முன்னாள் புலனாய்வு தலைவர் நிலந்த

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 22, 2020 12:40

சஹ்ரான்கள் வெடிக்கச் செய்வார்கள் என்பதை ஏற்கனவே அறிந்திருந்தோம் : முன்னாள் புலனாய்வு தலைவர் நிலந்த

சஹ்ரான் ஹாசிம் தாக்குதல் ஒன்றை நடாத்த தயாராகியுள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு பிரிவொன்றினால் அறிவுறுத்தப்படுவதற்கு முன்னர் மார்ச் 26 ம் திகதி அளவில் அதை இந்நாட்டு புலனாய்வு பிரிவு அறிந்து வைத்திருந்ததாக அதன் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு முன்னிலையில் முதற் தடவையாக அம்பலப்படுத்தினார். எனினும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் ஆணைக்குழு முன்னிலையில் நேற்று வலியுறுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற போது நாடு பூராகவும் கடமையில் ஈடுபட்டிருந்த அரச புலனாய்வு சேவையின் அதிகாரிகள் பலரிடம் ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று முன்தினம் ஊடகங்கள் இன்றி இரசகியமான முறையில் சாட்சிகளை பதிவு செய்தது. எவ்வாறாயினும் அங்கு முதற்தடவையாக தெரியவந்த பல விடயங்கள் குறித்து மேலதி சாட்சிகளை பெறுவதற்காக அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்த்தன நேற்று 25 வது நாளாகவும் ஆணைக்குழுவிற்கு; அழைக்கப்பட்டிருந்;தார்;.

ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி திரு ஜயவர்த்தன நாம் நாடு பூராகவும் கடமையிலுள்ள அரச புலனாய்வு சேவையின் பல அதிகாரிகளினது விசேட சாட்சிகளை நேற்று இரகசியமான முறையில் பதிவு செய்தோம். தாக்குதல் குறித்து முன்னறிவித்தல் வழங்கப்பட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் 4 ம் திகதி வெளிநாட்டு புலனாய்வு பிரிவினால் அனுப்பப்பட்ட தகவல்கள் குறித்து தாக்குதல் நடாத்தப்படும் வரை நீங்கள் எந்தவொரு புலனாய்வு அதிகாரியையும் அறிவுறுத்தி இருக்கவில்லையென இங்கு தெரியவந்தது. நீங்கள் ஏன் அவ்வாறு செய்தீர்கள். எல்.ரி.ஈ யுத்தம் நிலவிய போது முழு நாடும் யுத்தத்திற்கு தயாராகியிருந்தது. இதனால் அரச புலனாய்வு சேவையின் அதிகாரிகளும் நாடுபூராகவும் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

எனினும் அக்காலத்தில் காலிக்கு தாக்குதல் நடாத்தப்படலாமென புலனாய்வு தகவல் ஒன்று கிடைத்தால், காலி, அறிவுறுத்தப்படுவதில்லை. ஏன் என்றால் அவ்வாறு தாக்குதல் நடாத்தப்படாலாமென அறிவுறுத்தப்பட்ட போதிலும் அப்பகுதியில் உள்ள புலனாய்வு; அதிகாரிகளுக்கு எதனையும் செய்ய முடியாது காணப்பட்டது. நடவடிக்கைகள் அனைத்தும் கொழும்பிலுள்ள ஒரு மத்திய நிலையத்தின் மூலமே நிர்வகிக்கப்படுகிறது. இதனாலேயே இது குறித்தும் இச்சம்பவம் குறித்தும் நாடுபூராகவும் உள்ள கீழ் மட்ட அதிகாரிகளை அறிவுறுத்தவில்லை.

ஏப்ரல் 4 ம் திகதி அளவில் சஹ்ரான் இலங்கையில் எவ்விடத்தில் ஒழிந்திருந்தார் என்பதை நீங்கள் அறிந்து வைத்தீர்களா என கேட்டபோது சரியான இடத்தை நான் அறிந்;திருக்கவில்;லையென பதிலளித்தார். ஏப்ரல் 4 தகவல்களில் குறிப்பிடப்பட்டிருந்த பயங்கரவாதிகளின் புகைப்படமும்; தகவல்களும் நாடுபூராகவும் உள்ள அரச புலனாய்வு சேவை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து அவர்கள் எங்கு மறைந்திருந்ததை நீங்கள் தேடவில்லையா, மார்ச் 26யில் இடம்பெற்ற புலனாய்வு இணைப்புக் கூட்டத்தில் இராணுவ புலனாய்வு பணிப்பாளர் சபை சஹ்ரான் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக கூறியது. எனினும் சஹ்ரான் இலங்கையில் உள்ளதாக எனது நிலைப்பாடு இருந்தது. அரச புலனாய்வு சேவையின் சிரேஸ்ட அதிகாரிகளின் கூட்டம் பின்னர் இடம்பெற்றது.

சஹ்ரான் இருப்பது இலங்கையிலா, இந்தியாவிலா அல்லது சிரியாவிலா என நான் அங்கு கேட்டேன். அதனை உரிய முறையில் கண்டுபிடிக்க வேண்டுமெனவும் கூறினேன். பிரதி பணிப்பாளர் ஊடாக எமது பிரதிநிதிகளுக்கு சஹ்ரான் உள்ளிட்ட இனவாதிகளின் தகவல்களையும் புகைப்படத்தையும் அனுப்பினேன். அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்குமாறு கூறினேன். வெளிநாட்டு புலனாய்வு தகவல்களுக்கு முன்னர் நீங்கள் சஹ்ரான் இலங்கையில் தாக்குதல் ஒன்;றை நடத்தலாமென அறிந்து வைத்தீர்களா எனக் கேட்கப்பட்ட போது இலங்கையில் ஏதேனும் ஒன்றை செய்வார்கள் என நாங்கள் உணர்ந்தோம்.

நீங்கள் ஆணைக்குழு முன்னிலையில்; 25 வது நாளாக சாட்சியளிக்கிறீர்கள். இதற்கு முன்னர் ஒருபோதும் நீங்கள் கூறிய மார்ச் 26 ம் திகதி தாக்குதல் குறித்த தகவலை கூறவில்லை. குறைந்த பட்சம் பொலிஸ் பிரிவுக்கு வழங்கிய அறிக்கை மூலமும் இது குறிப்பிடப்படவில்லை எனக் கேட்டபோது பொலிஸ் பிரிவுக்கு தெரிவிக்கும் போது அது குறித்து கூறவில்லை. அரச புலனாய்வு சேவையினால் அனுப்பப்பட்ட ஆவணங்களில் அதுகுறித்து எதுவும் குறிப்பிடப்பட்டிக்க வில்லையென என நிலந்த ஜயவர்த்தன மேலும் தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி தொடர்ச்சியாக முன்வைத்த நேரடி பிரச்சினைகளுக்கு நிலந்த ஜயவர்த்தன சரியான பதில்களை வழங்காமையினால் தலைமை நீதிபதியின் பிரச்சினைகளுக்கு பொருத்தமில்லாத நீண்ட தெளிவுகள் தேவையில்லையென ஆணைக்குழு முன்னிலையில் வலியுறுத்தப்பட்டது. ஏப்ரல் 4 வெளிநாட்டு புலனாய்வு பிரிவினால் தாக்குதல் குறித்து தகவல்;கள் கிடைப்பதற்கு முன்னர் தாக்குதல் நடத்தப்படலாமெனக் கருதி பிரபல ஹோட்டல்களுக்கு அருகாமையில் உங்களது அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தினீர்களா என கேட்கப்பட்டபோது. இல்லை, சரியான ஹோட்டல் குறித்து அறிவிக்கப்படாததனால் நான் அதிகாரிகளை ஈடுபடுத்த வில்லையென தெரிவித்தார்.

இதுவரை பயங்கரவாத ஒழி;ப்பு பிரிவு இவ் ஆணைக்குழு முன்னிலையில் சஹ்ரான்கள் இத்தாக்குதலை 2019 ம் ஆண்டு மார்ச் 27 ம் திகதி பாணந்துறையில் அமைந்திருந்த பாதுகாப்பான வீடொன்றில் திட்டமிட்டிருந்ததாக சாட்சியமளித்தனர். நீங்கள் இத்தாக்குதலுக்கு முன்னர் இது குறித்து அறிந்து வைத்தீர்களா எனக் கேட்;டபோது அரச புலனாய்வு சேவைக்கு இதுபோன்ற தகவல் ஒன்று; கிடைத்திருக்க வில்லை. தாக்குதலின் பின்னரே இப்போது பல விடயங்களை அறிந்து வைத்திருந்ததாக எல்லோரும் கூறுகின்றனர். இத்தாக்குதல் திட்டமிடப்பட்ட ஆரம்பம் முதல் தெஹிவளை, ட்ரொப்பிக்கல் இன் விடுதியில் தாக்குதல் ஒன்றில் உயிரிழந்த ஜெமீல் எனும் பயங்கரவாதி இருந்துள்ளதாக இப்போது கூறுகின்றனர்.

ஜமீல் இனவாதி என்பதை 2017 முதல் நாம் கூறினோம். எனினும் ஜெமீலை சி.ஐ.டிக்கு வரவழைத்து இவர் எதனுடன் தொடர்பும் இல்லையென தெரிவித்து அவர் நல்லவர் எனக் கூறி அனுப்பி வைத்தனர். சாய்ந்தமருதில் உயிரிழந்த சஹ்ரானின் சகோதரர் ஒருவரான செய்னையும் தாக்குதலுக்கு முன்னர் மார்ச் 23 ம் திகதி சி.ஐ.டிக்கு வரவழைக்கப்பட்டு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டதை நான் அறிந்தேன் இது உறுதிசெய்யப்படாத தகவலாகும். இவர்கள் வரவழைக்கப்பட்டு பின்னர் அனுப்பப்படாது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், இவ்வாறான பாரிய அழிவொன்றை ஏற்படுவதற்கு முன்னர் தகவல்களை பெற்றிருக்க முடியுமென நிலந்த ஜயவர்த்தன கூறினார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 22, 2020 12:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க