தியத்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருத்தலாவ பகுதியில் பெண்ணொருவர்
தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலைசெய்துகொண்டுள்ளார். குறித்த பெண்
மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார். அதில் பலத்த காயமடைந்த அவர்
தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப்பலனின்றி
உயிரிழந்துள்ளார்.
தற்கொலை செய்துகொண்டவர் முருத்தலாவ – கல்ஏதண்ட பிரதேசத்தை
சேர்ந்த 43 வயதானவரென தெரியவந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரை
தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார்
முன்னெடுத்துள்ளனர்.