இந்தியாவின் டெல்லி மற்றும் ஏனைய வட பகுதிகளில் கடந்த இரு வாரங்களில் வளி மாசு அதிகரித்துள்ளது. இது பாரிய பாதிப்பாக அமையுமென அந்நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கெதிரான இந்தியாவின் போராட்டம் இதனால் பாதிக்கப்படுமென அவர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், கொவிட் – 19 தொற்றுக்குள்ளானவர்கள் உயிரிழப்பதற்கு, காற்றின் தரம் குறைகின்றமை முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தமையினால் வாகன போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன. இதனால் வளி மாசு குறைவடைந்திருந்ததோடு, மக்கள் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கு சந்தர்ப்பம் காணப்பட்டது. எனினும் தற்போது முடக்க நிலை தளர்த்தப்பட்டதையடுத்து வளி மாசடையும் வீதம் அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.