பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் கைதுசெய்யப்படுவதை தடுக்கும் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிப்பதா, இல்லையா என்ற தீர்மானம் நாளை வெளியிடப்படுமென மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த மனு இன்று ஆராயப்பட்டதன் பின்னர் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிஅரசர்களான மஹிந்த சமயவர்த்தன, அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்த்தபா நீதிமன்றத்தில் விளக்கமளிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சினமென் க்ரேண்ட் ஹொட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் இப்ராஹீம் இன்சாப் அஹமட்டுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்ச்hட்டின் பேரில் மனுதாரர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவரை 6 மாதங்களாக தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 29 ம் திகதி விடுதலை செய்யப்பட்டதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டதாக விசாரணைகளின் போது சாட்சியங்கள் இன்மையினால் மனுதாரர் விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தனது கட்சிக்காரருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சியங்கள் இல்லாமையினால் தடுத்து வைக்கும் உத்தரவை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்த நிலையில் மீண்டும் விசாரணை ஒன்றை நடாத்துமாறு சட்டமா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்க்ளத்த்pற்கு பணிப்புரை வழங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா செய்;தார்;. மீண்டும் அவரை கைதுசெய்வதற்க நியாயமான சட்டரீதியான காரணங்கள் இன்மையினால் அவரைக் கைதுசெய்;வதை தடுப்பதற்;கான தடையுத்தரவை பிறப்பிக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்;தை கோரினார். சட்டமா அதிபர் சார்பில் ஆஜரானா மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மனுதாரரை தடுத்து வைக்கும் ;உத்தரவு முடிவுக்கு கொண்டு வந்தபோதிலும், அந்த நிலை அவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கு தடையாக அமையாதென தெரிவித்தார்.
சந்தேக நபர் விடுவிக்கப்பட்டதன் பின்னர் அவருக்கு எதிராக புதிய சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டால், மீண்டும் கைது செய்வதில் எந்தவித சட்;டத்தடையும் இல்லையென மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.