பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தென்கொரிய பிரதமர் ச்சுங் சை கியூனுக்கும் இடையில் இன்று முற்பகல் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையில் கல்வி, சுற்றுலா மற்றும் புதிய முதலீட்டுச் சந்தர்ப்பங்கள் குறித்தே இதன்போது கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
கடந்த பொது தேர்தலில் பிரதமர் மஹிந்;த ராஜபக்;ஷ ஈட்;டிய வெற்றிக்காக வாழ்;த்து தெரிவித்;த தென்கொரிய பிரதமர் இலங்கையுடன் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த்pக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார். கொரிய சர்வதேச புரிந்துணர்வு முகவர் நிலையம், தற்போது பங்களிப்பை வழங்கியுள்ள இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் இருநாட்டு அரச தலைவர்களும் இவ்வுரையாடலின் போது கவனம் செலுத்த்pனர். கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தி விமான பயணங்கள் வழமைக்கு திரும்பியதுடன், இந்நாட்;டில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக கொரிய முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறு பிரதமர்; மஹிந்த ராஜபக்ஷ இதன்போது கோரிக்கை விடுத்தார்.
சுற்றுலா கைத்தொழிலுக்கும் கொரியாவின் பங்களிப்பு இன்றியமையாதவை என பிரதமர் சுட்டிக்காட்டினார். கொவிட் 19 தொற்று கட்டுப்படுத்தப்பட்டவுடன் இந்நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு பிரதமர் தென்கொரிய பிரதமருக்கு அழைப்பு விடுத்தார். இதற்கு முன்னர் ஒருபோதும் இலங்கைக்கு வந்ததில்லையென தெரிவித்த தென்கொரிய பிரதமர், பிரதமர் மஹிந்த ராஜபக்;ஷவின் அழைப்புக்கு இணங்கியுள்ளார்.