மாதிவெல மேற்கு விவசாய அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 23 ஏக்கர் நிலப்பரப்பிலான வயல்வெளியில் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் மேலதி செய்கைகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் எண்ணகருவிற்கு அமைய இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையும் காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனமும் இணைந்து இதனை அமுல்படுத்துகிறது.
மகா சங்கத்தினரின் பிரித் பாராணயத்திற்கு மத்தியில் இன்று முற்பகல் 7.37 க்கு காணப்பட்ட சுபவேளையில் மாதிவெல வயல்வெளியில் செய்கை மேற்கொள்ளப்பட்டது.