fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கிம்புலாஎல்ல குணாவின் உதவியாளரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 20, 2020 13:05

கிம்புலாஎல்ல குணாவின் உதவியாளரொருவர் கைது

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கிம்புலாஎல்ல குணாவின் உதவியாளரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசேட படைப்பிரிவினர் வெல்லம்பிட்டிய பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். அதன்போது கைதுசெய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து நான்கு கிரேமுக்கும் அதிக எடைகொண்ட ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பல்வேறு கொலைச்சம்பவங்களுடன் தொடர்புடையவரெனவும் தெரியவந்துள்ளது. ப்ரின்ஸ் கொலம் எனப்படும் ஒன்றிணைந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுவின் உறுப்பினராகவும் அவர் செயற்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 20, 2020 13:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க