fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையின் முதலாவது தேசிய சந்தன பூங்கா..

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 19, 2020 17:33

பத்தரமுல்லை ஸ்ரீ ஜயவர்தனபுர தேசிய சந்தன பூங்காவின் நிர்மாணப்பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வழிக்காட்டலில் இப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

1000 சந்தன மரங்களுடன் நிர்மாணிக்கப்படும், இலங்கையின் முதலாவது ஓய்வு நிலையமாக தேசிய சந்தன பூங்கா அமைகின்றது. பொது மக்கள் தமது குடும்பத்தினருடன் ஓய்வு நேரத்தை களிப்பதற்கு இந்த பூங்கா அமையுமென வீடமைப்பு அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பத்தரமுல்லை அபேகம வளவை அண்டியதாக பாராளுமன்ற கட்டட தொகுதிக்கு சமீபமாக ஒன்பது ஏக்கர் காணியில் இப்பூங்கா அமைகின்றது. ஆயிரம் சந்தன மரங்களை நடும் திட்டம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும்.

நாடக காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், நூல் வெளியீடு போன்றவற்றை நடத்த இங்கு சந்தர்ப்பம் உண்டு. சந்தன பூங்காவில் 11 நீர் நிலைகள் ஏற்படுத்தப்படவுள்ளன. பாரிய இரண்டு நீர் தாங்கிகளுக்கு மத்தியில் கலையரங்கொன்றும் அமைக்கப்படும்.

தேக அப்பியாசம், யோகா நிகழ்ச்சிகள், தியான நிகழ்ச்சிகளை நடத்தவும் இங்கு வசதிகள் ஏற்படுத்தப்படுமென நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவிக்கின்றது. உணவகங்கள், வாகன தரிப்பிடம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளும் இங்கு அடங்கவுள்ளன. பொதுமக்களிடம் எவ்வித கட்டணமும் அறவிடாமல், அங்கு பிரவேசிக்க வசதி செய்து கொடுக்கப்படும். இத்திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கைகளுக்கு என 132 மில்லியன் ரூபா செலவிடப்படும்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 19, 2020 17:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க