fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 19, 2020 17:09

வாழைச்சேனை வட்டார வனத் திணைக்களத்திற்கு சொந்தமான குடும்பி மலை, ஒதுக்காடு, கதிரவெளி ஆகிய பகுதிகளில் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

வாழைச்சேனை குடும்பிமலை ஒதுக்காடு பகுதியில் வட்டார வன உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் ஒரு ரீலோட்டர் இயந்திரமும் கைப்பற்றப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர்கள் சுங்கான்கேணி மற்றும் சித்தாண்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார், அத்தோடு வாழைச்சேனை அரச காடுகளில் காடழிப்பில் ஈடுபட்ட போது 3 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் உழவு இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபர்களை வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட வாகனம் நீதிமன்ற விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 19, 2020 17:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க