ஒலியை விட வேகமாக செல்லும் பிரஹ்மோஸ் சுப்பர்சொனிக் (Brahmos supersonic)) ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. INS சென்னை போர்க்கப்பலில் இருந்து அரபிக்கடலில் ஏவப்பட்டு, ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் Q ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கியதாக இந்திய இராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. தரை, வான், கடல் என மூவிடங்களிலும் பயன்படுத்தும் வகையில், பிரமோஸ் சூப்பர்சொனிக் ஏவுகணை தயாரிக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.