fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சௌபாக்கியா கொவிட் 19 புனர்வாழ்வு நிவாரணத்தின் கீழ் 61 ஆயிரத்து 907 வர்த்தகங்களுக்கு 178 பில்லியன் ரூபா நிவாரணம்..

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 19, 2020 12:21

சௌபாக்கியா கொவிட் 19 புனர்வாழ்வு கடன் திட்டத்திற்காக 178 பில்லியன் ரூபா நிதி மத்திய வங்கியினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்துள்ள வர்த்தகங்களுக்காக குறித்த திட்டத்தின் ஊடாக கடன் உதவி பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடன் விண்ணப்பங்கள் 61 ஆயிரத்து 907 கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதற்கெனவே மத்திய வங்கியினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

3 கட்டங்களின் கீழ் விண்ணப்பங்களை வழங்கியவர்களுக்காக கடன் உதவி வழங்கப்படவுள்ளது. அதன் அடிப்படையில் முதற்கட்டமாக 45 ஆயிரத்து 582 பேருக்கு தற்போது ஒரு இலடசத்து 35 ஆயிரத்து 192 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. கடன் திட்டத்தின் முதலாவது கட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

2 ம் மற்றும் 3 ம் கட்டங்கள் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல்; நடைமுறைக்கு: வரும் வகையில் செயற்படுத்தப்பட்டுள்ளன. 100 க்கு 4 வீத வட்டி வீதத்தின் அடிப்படையில் குறித்த திட்டத்த்pன் கீழ் கடன் வழங்கப்படுகிறது. 6 மாதங்கள் கடனுக்கான நிவாரண காலங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. சுய தொழில் தனி நபர் வியாபாரம் என்பவற்றுக்காகவும் கடன் உதவி வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட வியாபாராங்களுக்காக 150 பில்லியன்கள் வரை எல்லைப்படுத்தப்பட்ட கடன்களை வழங்க திட்டமிடப்பட்ட நிலையில் அதனை மேலும் அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. அதன் அடிப்படையில் தற்போது 178 பில்லியன் ரூபா கடன் தொகையாக வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 19, 2020 12:21

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33