fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா பரவலை அடுத்து இந்தியாவில் சிறுவர் தொழிலாளர்கள் அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 19, 2020 11:43

இந்தியாவில் சிறு பராய பிள்ளைகள் வாழ்க்கையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பரவலை அடுத்து சிறுவர் தொழிலாளர்கள் அதிகளவில் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் சிறுவர் திருமணங்கள் நூற்றுக்கு 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறுவர்களை சேவையில் ஈடுபடுத்துதல் ஆட்கடத்தல், சிறுவர் திருமணம், சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட 35 ஆயிரத்து 800 க்கும் அதிகமான குற்றச்செயல்கள் அண்மைக்காலத்தில் பதிவாகியுள்ளதாகவும் ஆய்வறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வைரசைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னுரிமைய அளித்து செயற்படுத்தும் இந்த காலப்பகுதியில் சிறுவர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது. புதுடில்லி நகரிலுள்ள வீதி சமிஞ்சைகளில் பெண்களும் சிறு பிள்ளைகளும் யாசகம் பெறுதல் மற்றும் வர்த்தகங்களில் ஈடுபடும் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவலையடுத்து வறுமை நிலை அதிகரித்துள்;ளமையினால் சிறுவர்கள் வர்த்தகங்களில் ஈடுபடவும் திருமண பந்தத்தில் இணைவதற்கான சூழல் உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 19, 2020 11:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க