fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையில் பிறந்து நியுசிலாந்தில் வளர்ந்த வனுஷி நியுசிலாந்து பாராளுமன்றத்தில்..

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2020 19:12

இலங்கையரான வனுஷி வோல்டர் நியுசிலாந்து பாராளுமன்ற பிரதிநிதியாக தெரிவாகியுள்ளார். பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் தொழில் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வடமேற்கு ஒக்லேண்ட் பிராந்தியத்திலிருந்து அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். இதன்போது அவர் எதிர்க்கட்சி வேட்பாளரை தோற்கடித்து 14 ஆயிரத்து 142 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

இலங்கையில் பிறந்த வனுஷி தமது பெற்றோருடன் தனது 5 வது வயதில் நியுசிலாந்து சென்று குடியேறினார். ஒக்லேண்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பட்டப் படிப்பை மேற்கொண்ட அவர் மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணி ஆவார். எம்னெஸ்டி இன்டர்னெஷனல் மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட முகாமையாளராகவும் அவர் செயற்பட்டுள்ளார்.

நியுசிலாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஜெஷிந்தா ஆர்டன் தலைமையிலான தொழில் கட்சி 100 க்கு 41.1 வீத வாக்குகளை பெற்று 120 ஆசனங்களில் 60 ஆசனங்களை கைப்பற்றியது. இம்முறை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி புதிதாக 40 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் இலங்;கையைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2020 19:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க