கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிச்செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பயணிகள் புறப்படுவதற்கு 72 மணிநேரக்காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறை இன்று மாலை 6.00 மணி முதல் அமுலுக்கு வருமென இலங்கை விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.